தமிழகம் கரூரில் இலங்கை பெண் ஒருவரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரமக்குடியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 52 வயதான குறித்த இலங்கை பெண் பணியாற்றியுள்ளார்.
கொள்ளை
இந்த நிலையில்,அந்த வீட்டின் 92 வயது மூதாட்டியை கொலை செய்து விட்டு தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றதாக முறையிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த நகைகளை அவர், 36 வயதான தனது மகனிடம் ஒப்படைத்திருந்த நிலையில்,இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
