கனடாவில், வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நிற்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைவாய்ப்புடன்படிக்க செல்கிறார்கள்.
படிப்பிற்காக பல லட்சங்களும் செலவு செய்யப்படுவதால் படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் வேலைவாய்ப்பு
குறித்த காணொளியில், கனடாவில் பிரபல உணவகமான டிம் ஹார்டனில் வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நிற்கின்றனர்.
பல மணி நேரம் வரிசையில் நிற்பவர்களிடம் உணவக ஊழியர்கள், அவர்களது விண்ணப்பங்களை வாங்கிக்கொண்டு பிறகு அழைப்பதாக கூறி அனுப்பி விடுகின்றனர்.
இந்த காணொளியை பதிவிட்ட நபர், பல இடங்களில் வேலைவாய்ப்புக்காக சென்றதாகவும், எங்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை, இது எனது போராட்டம் நிறைந்த நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://ibctamil.com/article/hundreds-indian-students-queue-for-job-in-canada-1719125963
