Home இலங்கை குற்றம் நுவரெலியாவில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

நுவரெலியாவில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

0

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் (09) புதன்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

26 வயதுடைய மூன்று பிள்ளையின் தாயொருவரே 33 வயதுடைய கணவரின் தாக்குதலுக்கு
இலக்காகி இவ்வாறு காயமடைந்துள்ளார்.

கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தொழிலுக்காக கொழும்புக்கு செல்வதாக கூறி தனது முன்னாள் காதலனின் வீட்டிற்கு சென்று அன்றிரவு தங்கி உள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

இதனை அறிந்து கொண்ட கணவன், மனைவியை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, சம்பவத்தில் காயமடைந்த பெண் அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/husband-arrested-for-stabbing-wife-in-nuwara-eliya-1728481082

NO COMMENTS

Exit mobile version