Home இலங்கை குற்றம் இளம் மனைவியை கொலை செய்த கணவன்

இளம் மனைவியை கொலை செய்த கணவன்

0

வாகரை பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து வாகரை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண் தட்டமுனை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கம்பியால் கழுத்தை நெரித்து கொலை

பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் மின்விசிறி கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீதவான் விசாரணைக்கு பிறகு சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

குற்றத்தைச் செய்த பின்னர் சந்தேக நபரான கணவரும் விஷம் குடித்து தற்போது மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், 25 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

NO COMMENTS

Exit mobile version