Home இலங்கை குற்றம் இளம் மனைவியுடன் முரண்பட்ட நபரை கொடூரமாக கொலை செய்த கணவன்

இளம் மனைவியுடன் முரண்பட்ட நபரை கொடூரமாக கொலை செய்த கணவன்

0

களுத்துறை பொத்துப்பிட்டிய பகுதியில் தடிகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரக்வான, ரம்புக்க பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவருக்கும் அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவருககும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

நபர் மீது தாக்குதல்

இதன் காரணமாக கோபம் அடைந்த பெண்ணின் கணவன், மேலும் இருவருடன் இணைந்த குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் 28 மற்றும் 35 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொத்துப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/husband-killed-wife-ex-lover-in-kalutara-1720865762

NO COMMENTS

Exit mobile version