Home இலங்கை அரசியல் மகிந்தவின் தூக்கு தண்டனை! பின்வாங்கினார் சரத் பொன்சேகா

மகிந்தவின் தூக்கு தண்டனை! பின்வாங்கினார் சரத் பொன்சேகா

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிடும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சமீபத்தில் மாத்தைறையில் வெளியிட்ட கருத்துக்களை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்தவின் போர் நிறுத்த உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த, பெப்ரவரி 2009 இல் போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்டு பாதுகாப்புப் படைகளின் முன்னோக்கிய பாதுகாப்பு வரிசைகளை அழித்ததற்காக மட்டுமே அவர் தூக்கிலிடப்பட்டிருப்பார் என்று தான் கூறியுதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேசத்தை காட்டி கொடுக்கும் ஒரு நபர் தென்கொரியாவில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுடப்பட்டிருப்பார் எனவும் இதே சவுதி அரேபியாவில் கால்களால் தொங்கவிடப்பட்டிருப்பார் என்று மட்டுமே தான் கூறியுதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு புத்த பிக்கு உட்பட சிலர் எனது அறிக்கைகளை தவறாகப் புரிந்துகொண்டு சில விடயங்களைச் சொல்கிறார்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version