Home இலங்கை அரசியல் அநுர பதிலளிக்கும் வரை பேரணிகளில் கேள்வி எழுப்புவேன் : ரணில் தெரிவிப்பு

அநுர பதிலளிக்கும் வரை பேரணிகளில் கேள்வி எழுப்புவேன் : ரணில் தெரிவிப்பு

0

Courtesy: Sivaa Mayuri

அநுரகுமார திசாநாயக்க பதிலளிக்கும் வரை, அனைத்து பேரணிகளிலும் அவரிடம் கேள்வி எழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“வடக்கில் உள்ள மக்களை அச்சுறுத்தியதற்காக மன்னிப்பு கேட்பீர்களா என்று நான் அநுரவிடம் கேள்வி எழுப்பினேன். யாழ்ப்பாணத்தில் நான் கூறிய எனது இந்தக் கருத்துக்கு அவர் பதிலளித்ததாகக் கேள்விப்பட்டேன்” என்று வெலிமடையில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வர்த்தக உடன்படிக்கைகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுமதி செயலாக்க வலயங்களை அமைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்று சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அநுரவின் விஞ்ஞாபனம் இலங்கை ஏற்கனவே செய்துள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரத்து செய்யும் என்று கூறுகிறது.

இந்தநிலையில், தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகள் இல்லாமல் நீங்கள் எவ்வாறு ஏற்றுமதிகளை அபிவிருத்தி செய்ய முடியும்? இந்தக் கேள்விக்கு அநுர பதிலளிக்க வேண்டும். அவர் எனக்குப் பதிலளிக்கும் வரை இந்தக் கேள்விகளை அனைத்து பேரணிகளிலும் எழுப்புவேன் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version