Home இலங்கை அரசியல் தமிழரசுக்கட்சியை விட்டு ஒரு போதும் செல்ல மாட்டேன்! சிறீதரன் பகிரங்கம்

தமிழரசுக்கட்சியை விட்டு ஒரு போதும் செல்ல மாட்டேன்! சிறீதரன் பகிரங்கம்

0

நான் தமிழரசுக்கட்சியை விட்டு ஒரு போதும் செல்ல மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan)  பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “என்னுடைய கட்சியென்பது இலங்கை தமிழரசுக்கட்சிதான் (ITAK).

அந்தக்கட்சியை விட்டு போகின்ற எண்ணமும் விலகியிருக்கின்ற எண்ணமும் என்னிடம் இல்லை.சிலர் என்னை வீழ்த்தி விட போராடினாலும் கடைசிவரை போராடுவேன்.

இலங்கை தமிழரசு கட்சியென்பது தமிழர்களுடைய சுயநிர்யணஉரிமையை அடித்தளமாக வைத்து சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடிநாதமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும்.

அதனுடைய கொள்கை பிறழாது அதனுடைய தாகம் தீராது அடிப்படை வரலாறுகளை நிராகரிக்காமல் தமிழரசுக்கட்சி இப்பொழுதும் நிலையான பயணத்தை செய்கின்றது.

தென்னிலங்கையில் தற்போது நடந்துள்ள அரசியல் மாற்றம், அது ஒரு வேளை மாயையாக இருக்கலாம்.

மாற்றம் நடப்பது நல்லது, அவ்வாறு நல்லது நடைபெறும் போது நாமும் மாற்றத்தோடு சேர்ந்து பயணிப்போம் என தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கூறிக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் நடந்ததை தான் நீங்களும் செய்வீர்களானால் வரலாறு மீண்டும் ஒரு கதையை சொல்லும்.” என்றார். 

இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

https://www.youtube.com/embed/JCDxfQ3LL28

NO COMMENTS

Exit mobile version