Home இலங்கை அரசியல் இன்று முதல் நான் எதிர்க்கட்சியில் தான் இருப்பேன் : எச்சரிக்கும் அர்ச்சுனா எம்பி

இன்று முதல் நான் எதிர்க்கட்சியில் தான் இருப்பேன் : எச்சரிக்கும் அர்ச்சுனா எம்பி

0

அநுர (Anura) அரசாங்கத்திற்கு நான் வழங்கிய அனைத்து ஆதரவுகளையும் இன்றிலிருந்து இல்லாமல் செய்வதுடன் இனிமேல் உண்மையான எதிர்க்கட்சியாக நான் நிற்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “64 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை கதைப்பதற்கு இடங்கொடுக்காது விட்டமை அரசாங்கத்தின் வெட்கம் கெட்ட செயல் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் அதை விசாரிப்பதற்கு குழுவை அமைத்து 34 நாட்கள் எடுத்து கொண்டமை ஏன் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழ், சிங்கள மக்கள் ஒன்றாக வாழ வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் உண்மையான விடயங்களைக் கதைப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும். ஏன் அரசாங்கம் பயப்படுகின்றது.

நான் விடுதலைப்புலிகளைச் சேர்ந்த ஒருவராக இருந்தால் என்னைக் கைது செய்யுங்கள் அல்லது கொலை செய்யுங்கள். இந்த அரசு எத்தனை கொலைகளைச் செய்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எத்தனை பேரை கொலை செய்துள்ளார்கள்“ என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/gAOnSa7y5UU

NO COMMENTS

Exit mobile version