Home அமெரிக்கா அமெரிக்கா கிரிக்கெட்டை உறுப்பினர் நிலையில் இருந்து உடனடியாக நிறுத்திய ICC

அமெரிக்கா கிரிக்கெட்டை உறுப்பினர் நிலையில் இருந்து உடனடியாக நிறுத்திய ICC

0

சர்வதேச கிரிக்கெட் பேரவை, அமெரிக்கா கிரிக்கெட்டை, தமது உறுப்பினர் நிலையில்
இருந்து உடனடியாக நிறுத்தியுள்ளது. 

நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ் நிலை கூட்டத்திற்குப் பிறகு சர்வதேச
கிரிக்கட் பேரவையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக சீர்திருத்தங்கள்.. 

இந்த முடிவுக்கான சரியான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை

என்றாலும், கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தின்
போது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தி “விரிவான” நிர்வாக
சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதை அடுத்து இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த இடைநீக்கம் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கிண்ணத்தில் அமெரிக்க
கிரிக்கெட் அணியின் பங்கேற்பைப் பாதிக்காது என்று கூறப்படுகிறது.

இந்த தொடரை, இந்தியா மற்றும் இலங்கை என்பன இணைந்து நடத்துகின்றன.

NO COMMENTS

Exit mobile version