ஒரே பாலின திருமணங்களை குற்றமற்றதாக்கும் யோசனை ஒன்று, நாடாளுமன்றத்தில்
இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கூறியதை
நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார்.
இலங்கைக்கு நான்கு நாள் பயணத்தின் முடிவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக
சந்திப்பில் டர்க் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்கும் யோசனையை தாம் வரவேற்பதாகவும், அது
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை தாம்
புரிந்து கொள்வதாகவும், உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், தமது நிகழ்ச்சி நிரலுக்குள் எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட
காலக்கெடுவும் கொண்ட எந்தவொரு யோசனையும், நாடாளுமன்றில் இல்லையென்று நீதி
அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
