Home இலங்கை அரசியல் திசைகாட்டி எம்.பி.க்கள் திருடினால்.. அமைச்சர் லால்காந்தவின் கடும் எச்சரிக்கை

திசைகாட்டி எம்.பி.க்கள் திருடினால்.. அமைச்சர் லால்காந்தவின் கடும் எச்சரிக்கை

0

 தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள், அமைச்சர்கள், தலைவர்கள் மற்றும் அனைவரும் திருட்டு, மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம் செய்ய முடியாது என கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, யாராவது இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், மக்களும் இது தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரிசி இறக்குமதி

இதற்கிடையில், இலங்கை இன்னும் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும், 2028 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்தும் திட்டத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் லால்காந்த மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version