Home இலங்கை அரசியல் என் மனைவியை தொட்டால்…ஜனாதிபதிக்கு லொகான் ரத்வத்த பகிரங்க எச்சரிக்கை

என் மனைவியை தொட்டால்…ஜனாதிபதிக்கு லொகான் ரத்வத்த பகிரங்க எச்சரிக்கை

0

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது மனைவிமார்கள் அண்மையில் கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் லொகான் ரத்வத்த (Lohan Ratwatte), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி தேர்தல் பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தானும் மனைவியும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டத்தாக கூறி தனது கோபத்தையும் லோகன் ரத்வத்த வெளிப்படுத்தியுள்ளார்.

எச்சரிக்கை

அதன்போது, “வெட்கக்கேடானது. நீங்கள் என்னையும் என் மனைவியையும் சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல், இப்போது மற்றொரு முன்னாள் முதலமைச்சரும் ஒரு முன்னாள் அமைச்சரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என அவர் ஜனாதிபதியை குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு, 1983-84 இல் ஜேவிபி கலவரத்தின் போது செய்யப்பட்ட குற்றங்களுக்காக ஜனாதிபதியும் அவரது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் ரத்வத்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேசத்திற்கு நல்லது செய்தால் ஜனாதிபதியை ஆதரிப்பதாகவும், இல்லையென்றால், தாங்கள் மாற்று நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை எத்தனை முறை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என்றும் தன் மனைவியைத் தொட்டால், தான் என்ன செய்வேன் என்று தனக்குத் தெரியும் என்றும் முன்னாள் அமைச்சர் லொகான் ரத்வத்த ஜனாதிபதியை எச்சரித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version