இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் இன்று (30.04.2024) காலை வவுனியாவில் புகையிரத
வீதியில் அமைந்துள்ள RH விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
விசேட கலந்துரையாடல்
இதில் முதல் நிகழ்வாக ஆய்வாளர் நிலாந்தனது அறிமுக உரையை தொடர்ந்து
அகவணக்கம் செலுத்தப்பட்டு கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
இந்த கலந்துரையாடலில் அகத்தியர் அடிகளார், திருகோணமலை வண ஆயர் நொயல் இமானுவேல்
வேலன் சுவாமிகள் உட்பட 48 சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வணக்கத்திற்க்கு
உரிய மத தலைவர்கள் என கலந்து கொண்டுள்ளனர்.
சி.ஐ.டி பொலிஸாராக கப்பம் பெற்ற நால்வர்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
ஐக்கிய மக்கள் சக்தியில் தொடரும் சிக்கல்: விஜித் விஜியமுனியை சாடும் பொதுச்செயலாளர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |