Home இலங்கை அரசியல் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு இளங்குமரன் எம்.பி திடீர் விஜயம்

தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு இளங்குமரன் எம்.பி திடீர் விஜயம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின்
கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட குழுவினர் தர்மபுரம்
வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
தொடர்பாகவும் வைத்திய சாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்பாகவும் அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

தர்மபுரம் வைத்தியசாலையில் தற்பொழுது ஒரே ஒரு வைத்தியரே கடமையாற்றி வருகின்றார். இங்கு நாளாந்தம் 300இற்கும் அதிகமான வெளி நோயாளர்கள் வருகை தருவதாகவும் அவர்களுக்கான சிகிச்சையை பார்வையிடுவது மட்டுமின்றி வாராந்த சிகிச்சை அவசர தேவை கருதி வரும் நோயாளர்களையும் பார்வையிட வேண்டிய தேவையும் உள்ளது.

இளங்குமரனின் உறுதி 

இதன் காரணமாக தொடர்ச்சியாக 24 மணி
நேரமும் தம் கடமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வைத்தியாசாலையில் உள்ள குறைபாடுகளை விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version