Home இலங்கை அரசியல் சிறீதரனுக்கு மாவை எழுதிய கடிதத்தால் வெடித்தது சிக்கல்

சிறீதரனுக்கு மாவை எழுதிய கடிதத்தால் வெடித்தது சிக்கல்

0

இலங்கை தமிழரசுக் கட்சி 75 வருடங்களை நிறைவு செய்திருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 60 வருடங்கள் கட்சியில் இருந்த மாவை சேனாதிராஜாவுக்கு (
Mavai Senathirajah) கடிதம் எழுதுவதற்கான முறை தெரியவில்லை என ஒரு விமர்சனம் எழுந்திருக்கின்றது.

உண்மையிலேயே சிவஞானம் சிறீதரனுக்கு (S. Shritharan) மாவை ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கின்றார்.

அதாவது, நான் பதவி விலக தீர்மானித்திருக்கின்றேன். நீங்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தலைவராக இருக்கும் காரணத்தினால், தலைவர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என அந்த கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மாவை சேனாதிராஜா பதில் பொது செயலாளருக்கு கையளித்த அந்த கடிதம் எந்தவகையிலும் உத்தியோகபூர்வமானது அல்ல.

தற்போது இலங்கை தமிழரசுக்கட்சியானது தேர்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், தெரிவுக்குழுவில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகத்தான் மாவை சேனாதிராஜா இவ்வாறாக ஒரு கடிதத்தை கைளித்தார் என்பது அனைவருக்கும் தெரியும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் இலங்கை தமிழரசுக்க கட்சியின் தீவகக் கிளையின் தலைவருமான மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.     

குறித்த கடித விவகாரம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்….

NO COMMENTS

Exit mobile version