Home இலங்கை சமூகம் சட்டவிரோத கருகலைப்பு மாத்திரைகளை விற்பனை : உரிமையாளரை சுற்றிவளைத்த காவல்துறையினர்

சட்டவிரோத கருகலைப்பு மாத்திரைகளை விற்பனை : உரிமையாளரை சுற்றிவளைத்த காவல்துறையினர்

0

நுவரெலியாவில் (Nuwara Eliya) சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக
உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (06) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நுவரெலியாவில் மருந்தகம் ஒன்றில் கருக்கலைப்பு மாத்திரைகளை அம்மருந்தகத்தின் உரிமையாளர் விற்பனை செய்துள்ளார்.

குற்றத்தடுப்பு பிரிவு 

மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு சட்டவிரோத கருக்கலைப்பு
மாத்திரையை 15,000 ரூபாய்க்கு மருந்தக உரிமையாளர் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சம்பவதினமான இன்று (06) பகல் நுவரெலியா சுகாதார வைத்திய
அதிகாரிகளுடன் குறித்த மருந்தகத்தை குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பரிசோதகர்
மேனன் தலைமையிலான காவல்துறையினர் முற்றுகையிட்டு சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த ஏராளமான கருக்கலைப்பு
மாத்திரைகளை கைப்பற்றியதையடுத்து மருந்தகத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version