Home இலங்கை குற்றம் மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம்: ஒருவர் கைது

மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம்: ஒருவர் கைது

0

மட்டக்களப்பு (Batticaloa) – நெடுஞ்சேனை ஆற்றை அண்டிய காட்டுப் பகுதியில் மிகவும் இரகசியமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது, இன்று காலை (09.06.2024) வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

வவுணதீவு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைய வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளால் அப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்னிலை

இதன்போது, சந்தேகத்தின் பேரில் 22 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், 5 பரல் கோடா மற்றும் காடி போன்ற
பதார்த்தங்களுடன், 150 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் சில
உபகரணங்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் மற்றும்

கைப்பற்றப்பட்ட பரல்கள் உள்ளிட்ட பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Source: https://tamilwin.com/article/illegal-alcohol-production-in-batticaloa-1717937915

NO COMMENTS

Exit mobile version