Home இலங்கை குற்றம் யாழில் கைத்தொலைபேசி களவாடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது

யாழில் கைத்தொலைபேசி களவாடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது

0

யாழ். (Jaffna) வட்டுக்கோட்டையில் கைத்தொலைபேசி ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் ஒருவருடைய,
45ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர்
களவாடப்பட்டிருந்தது.

மேலதிக விசாரணைகள் 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிவு செய்யப்பட்டது.

அந்தவகையில், விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை
பொலிஸார் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்றையதினம் கைது
செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/man-arrested-in-jaffna-for-stealing-a-mobile-1733359090

NO COMMENTS

Exit mobile version