Home இலங்கை குற்றம் பிபிலையில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி எடுத்துச் சென்றவர்கள் கைது

பிபிலையில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி எடுத்துச் சென்றவர்கள் கைது

0

பிபிலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது நேற்று(25) பிபிலை, கொட்டபோவ பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

பொலிஸார் சந்தேகம்

இதன் போது சந்தேக நபர்கள் சட்டவிரோதமான முறையில் முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்ற 200 கிலோ மாட்டிறைச்சியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கிய நபரையும் கைது செய்து மேலதிக விசாரணைகளை  பொலிஸார்  முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சி திருடப்பட்ட மாடொன்றின் இறைச்சியாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version