Home இலங்கை சமூகம் தமிழர் தலைநகரில் தாக்குதலுக்குள்ளான நகரசபை ஊழியர்

தமிழர் தலைநகரில் தாக்குதலுக்குள்ளான நகரசபை ஊழியர்

0

திருகோணமலை பகுதியில் நகரசபை ஊழியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

திருக்கோணேச்சரம் ஆலயத்தை அண்மித்த கடைத்தொகுதி ஒன்றில் தடை செய்யப்பட்ட கசிப்பு ரக மதுபானம் விற்பனை செய்யப்பட்ட கடையானது இன்று (30) திருகோணமலை நகரசபையினரால் அரக்குமுத்திரையிடப்பட்டு பூட்டப்பட்ட போதே குறித்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த வாரம் திருகோணமலை (Trincomalee) – திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினை அண்மித்த கடையொன்றில் தடை செய்யப்பப்பட்ட கசிப்பு வகை மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கருதப்பட்டு அந்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

திருகோணமலை நகரசபை 

இந்த நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றைய தினம் (30) அந்த கடைக்கு அரக்குமுத்திரையிடப்பட்டு, பூட்டப்பட்டதாக திருகோணமலை நகரசபை செயலாளர் தே.ஜெய விஷ்ணு செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அப்பகுதிக்கு நகரசபை அதிகாரிகள் விரைந்து கடையை அரக்குமுத்திரையிட முற்பட்டபோதே அங்கு இனம் தெரியாத நபர் ஒருவரால் அரச கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு, நகரசபை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பொது வைத்தியசாலை

இந்த நிலையில், அவர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நகரசபை செயலாளர் கூறியுள்ளார்.

மேலும், சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த காவல்துறையினரும் தாக்குதலை தடுக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளளார். 

NO COMMENTS

Exit mobile version