Home முக்கியச் செய்திகள் மிரிஹானையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் கண்டுபிடிப்பு!

மிரிஹானையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் கண்டுபிடிப்பு!

0

தீர்வை செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் ஒன்று மிரிஹான பகுதியில் உள்ள வீடொன்றினுள் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த ஜீப் கண்டுபிடிக்கப்பட்டது.

போலி ஆவணங்களுடன் போலியாக தயாரிக்கப்பட்ட குறித்த ஜீப், தற்போதைய உரிமையாளரின் வீட்டில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

போலி தரவுகள்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு ஜீப்
வண்டியின் தரவைப் போலியாக உள்ளிட்டு, ஜீப் வண்டியும் அதன் தரவுகளும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version