தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் நிவாரணம் வழங்காவிட்டால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மறு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என இலங்கை சுங்க திணைக்களம் (Sri Lanka Customs) தெரிவித்துள்ளது.
அரசாங்கம் ஒரு தீர்வை வழங்கும் அதேவேளையில் இந்த விடயத்தில் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று சுங்கம் குறிப்பிட்டுள்ளது.
300க்கும் மேற்பட்ட வாகனங்கள்
பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் வங்கியிலிருந்து பதிவு ரத்து செய்யப்பட்டதற்கான முத்திரையிடப்பட்ட சான்றிதழ் கட்டாயமாகும் என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
இந்தத் தேவையான சான்றிதழ் இல்லாமல் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் அவற்றை உள்ளூர் சந்தையில் வெளியிட முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
