Home முக்கியச் செய்திகள் 54 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்! சிஐடி பணிப்பாளர் பதவியிலும் மாற்றம்

54 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்! சிஐடி பணிப்பாளர் பதவியிலும் மாற்றம்

0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (Criminal Investigation Department – Sri Lanka) பணிப்பாளராக மகளிர் பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி எச்.டபிள்யூ.ஐ. இமேஷா முதுமால (H.W.I. Imesha Mudumala) நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பிரதி காவல்துறைமா அதிபர்கள், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 54 பேருக்கு இன்றையதினம் (03.12.2024) இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தேசிய காவல்துறை 

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகச் செயற்பட்ட மகளிர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஐ.எஸ் முதுமால அந்த திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் 5 பிரதி காவல்துறை மா அதிபர்களுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version