Home இலங்கை பொருளாதாரம் இலங்கை நிறைவேற்றாத சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள்

இலங்கை நிறைவேற்றாத சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள்

0

Courtesy: Sivaa Mayuri

தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் மூன்றாவது கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை ஜூன் 12ஆம் திகதி அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எவ்வாறாயினும், இலங்கை அதன் பொருளாதார மீட்சிக்கு அடித்தளமாக இருக்கும் நிர்வாக மேம்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

நிறுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பு! மத்திய வங்கிக்கு உத்தரவிட அரசாங்கத்திற்கு இல்லாத அதிகாரம்

நிதி மேலாண்மை

சர்வதேச நாணய நிதியத்தின் வெரிட் ஆய்வின் அண்மைய புதுப்பிப்பின்படி, 2023 டிசம்பரில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் 25வீதக் கடப்பாடுகளை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டுள்ளதோடு நிறைவேற்ற வேண்டிய 63 பொறுப்புகளில் 32 பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.16 நிறைவேற்றப்படவில்லை. மற்றும் 15 பொறுப்புக்கள் குறித்து தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்படாத 16 உறுதிமொழிகளை ஆராயும்போது அவற்றில் 7 நிபந்தனைகள் நிதி மேலாண்மை சம்பந்தப்பட்டவையாகும்.

ஆறு நிபந்தனைகள் நிதி வெளிப்படைத்தன்மை விடயத்திலும், 3 நிபந்தனைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இந்திரா காந்தியை மோசமாக சித்தரித்த சுவரொட்டிக்கு கண்டனம்

கிரீஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானிய தொலைக்காட்சி தொகுப்பாளரின் உடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version