Home இலங்கை பொருளாதாரம் ஐ.எம்.எப் இன் கொடுப்பனவு கிடைக்கும் : நம்பிக்கை வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர்

ஐ.எம்.எப் இன் கொடுப்பனவு கிடைக்கும் : நம்பிக்கை வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர்

0

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவை பெறுவதில் எவ்வித சிரமமும் ஏற்படாது என பொருளாதார நிபுணர் இந்திரஜித் குமாரசுவாமி (Indrajit Coomaraswamy) தெரிவித்துள்ளார். 

அண்மையில் லண்டனில் (London) நடைபெற்ற பேச்சுவார்த்தைச் சுற்றில் தனியார் பத்திரப் பதிவுதாரர்களுடன் உடன்படிக்கையை
ஏற்படுத்திக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இந்நிலையிலேயே, இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய நாடுகளில் இலங்கையருக்கு கிடைத்த உயர் பதவி

இரண்டாவது மதிப்பாய்வு

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சர்வதேச நாணய நிதியத்தின் 3
பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியின் கீழ் வரும் மூன்றாவது தவணை
கொடுப்பனவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. 

தற்போது பேச்சுவார்த்தைகள் நல்ல நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்கின்றன. 

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பாய்வுக்கு இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்
அடிப்படையில், நல்ல நம்பிக்கையுடன் தொடர்ச்சியான
பேச்சுவார்த்தைகள் இருக்க வேண்டும்.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் அந்த நிபந்தனைகள் பூர்த்தி
செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இந்த விடயத்தை அவநம்பிக்கையுடன்
பார்க்கக் கூடாது. 

இந்திய பொதுத் தேர்தல் 2024 – உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஆரம்பம்

கருத்து வேறுபாடுகள்

இருப்பினும், பத்திரகாரர்களுடனான பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முறிந்தால், சர்வதேச
நாணய நிதியத்தினால் பணியாளர் ஒப்புதல் தாமதமாக்கப்படும். 

மேலும், தனியார் பத்திரப்பதிவுதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் நான்கு
கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. 

எனினும், அவை எதுவும் மறுசீரமைப்பு தொகுப்பின் மையத்துடன் தொடர்புடையவை அல்ல. 

எனவே, அரசாங்கம் தனது முன்மொழிவில் முன்வைத்துள்ள அடிப்படை கட்டமைப்பிற்கமைய எந்த பிரச்சினையும் இல்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த இலங்கையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version