Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் அடுத்தக்கட்ட நகர்விற்கு தயாராகும் ஐ.எம்.எப்

இலங்கையில் அடுத்தக்கட்ட நகர்விற்கு தயாராகும் ஐ.எம்.எப்

0

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது மதிப்பீட்டை மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்க குறித்த கூட்டம் கூடவுள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கூட்டமானது, பெப்ரவரி 28 ஆம் திகதி கூடும் என கூறப்படுகிறது.

நிதியுதவி 

நவம்பர் 23, 2024 அன்று IMF ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே மூன்றாவது மதிப்பாய்வு குறித்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இந்தநிலையில், IMF இன் நிர்வாகக் குழுவின் ஒப்புதலின் அடிப்படையில், இலங்கை சுமார் 333 மில்லியன் டொலர் நிதியுதவியைப் பெறும் என தெரிவக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version