ஊழல், மோடிகளுக்கு எதிரான புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாரங்களை இரத்து செய்வது தொடர்பான நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐஎம்எப் உடனான பேச்சுவார்த்தை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன், புதிய ஜனாதிபதி வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என்று நாம் நம்புகிறோம்.
ஏனெனில், 2023 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்றிலுள்ள எந்தவொரு கட்சியுடனும் கலந்துரையாடாமல்தான் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டார். இதன் பின்னர்தான் நாடாளுமன்றுக்கு இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டது.
இந்த விடயத்தில் நாம் ஒன்றாக ஒரு நாடாக முகம் கொடுத்தால், சர்வதேச நாணய நிதியம், மற்றும் கடன் வழங்குநர்களுடன் சக்திமிக்கதொரு கலந்துரையாடலை மேற்கொள்ள முடியும்.
ஊழல், மோடிகளுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாரங்களை இரத்து செய்வது தொடர்பான நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.