Home இலங்கை பொருளாதாரம் ஜனாதிபதி அநுரவை முதல் தடவையாக சந்திக்க வரும் சர்வதேச நாணய நிதியம்

ஜனாதிபதி அநுரவை முதல் தடவையாக சந்திக்க வரும் சர்வதேச நாணய நிதியம்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் புதிய அரசியல் தலைமை,சர்வதேச நாணய நிதியத்துடன் தனது நிதித் திட்டத்தைத் தொடர்வதற்காக விரைவான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குத் தயாராகி வரும் நிலையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் அவசியத்தை உணர்ந்து இந்த சந்திப்பு நிகழவுள்ளது.

இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மை

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் தலைவர் ஜூலி கோசாக்கின் கூற்றுப்படி, இலங்கையின் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு அக்டோபர் நடுப்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது,

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் வரவிருக்கும் பணியாளர்களின் வருகையானது ஒக்டோபர் மாதத்திற்குள் இலங்கையின் முன்னேற்றத்தை மதிப்பிடும்.

மேலும் இது நவம்பரில் எதிர்பார்க்கப்படும் அடுத்த நிதியுதவி வழங்கப்படுவதை அந்த குழு தீர்மானிக்கும்.

இதற்கிடையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும், அரசாங்கம் தற்போதைய கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை பின்பற்றினால், ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் பத்திரப் பரிமாற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வது இன்றியமையாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version