Home இலங்கை அரசியல் புதிய அமைச்சரவையின் முதல் நகர்வு: அடுத்த வேலையை தொடர்ந்த ஐ.எம்.எப்

புதிய அமைச்சரவையின் முதல் நகர்வு: அடுத்த வேலையை தொடர்ந்த ஐ.எம்.எப்

0

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்கள் குழுவுடன் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துரையாடி உள்ளது.

குறித்த கலந்துரையாடலானது, இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதன் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தேர்தல் வெற்றி

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர், தீர்மானகரமான தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி மற்றும் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றியானது தற்போதுள்ள ஆட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்கள் ஆணைக்கு அமைய செயற்படுவது தமது ஆட்சியின் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார். 

NO COMMENTS

Exit mobile version