Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் சீர்திருத்த வேகத்தை உறுதிப்படுத்த வலியுறுத்தும் ஐ.எம்.எப்

இலங்கையின் சீர்திருத்த வேகத்தை உறுதிப்படுத்த வலியுறுத்தும் ஐ.எம்.எப்

0

இலங்கையில் சீர்திருத்த வேகம் பேணப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா
கோபிநாத் வலியுறுத்தியுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் வாஷிங்டனில் இடம்பெற்ற
பேச்சுவார்த்தையின் போது அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

பணவீக்கக் குறைப்பு, வருமான அதிகரிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்
உட்பட பல அம்சங்களில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமைக்காக கோபிநாத் இலங்கை
அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தமது எக்ஸ்
பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கமான ஒத்துழைப்பு

பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும்
இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு முக்கியமானது.

அத்துடன் மேலும் நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட
சீர்திருத்தங்களின் பலன்களை நாடு இப்போது அறுவடை செய்து வருகிறது என்றும் கீதா
கோபிநாத் தெரிவித்துள்ளார்.

பயணபாதையில் மாற்றம் – ஸ்ரீலங்கன் விமான சேவை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆளுநர் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version