Home இலங்கை பொருளாதாரம் இலங்கையுடனான எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம்

இலங்கையுடனான எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் தமது திட்ட அளவுருக்களுடன் ஒத்துப்போகும் வெளி வணிகக் கடனாளர்களுடன் விரைவில் ஒப்பந்தங்கள் எட்டப்படும் என்று பலமான எதிர்பார்ப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், ஜூன் 12 ஆம் திகதி, செயற்குழு ஒன்று கூடி இலங்கை தொடர்பான 2வது மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்ட தகவல்

வணிகக் கடன் வழங்குநர்கள்

இலங்கையின் பொருளாதார கொள்கை சீர்திருத்தங்கள் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பிடத்தக்க சாதனைகளில் விரைவான பணவீக்கம், வலுவான இருப்பு சேர்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஊக்கமளிக்கும் அறிகுறிகள் என்பன அடங்கும் என்றும் இவை அனைத்தும் நிதி ஸ்திரத்தன்மையை பராமரிக்கின்றன என்று  ஜூலி கோசாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிய தாமதங்கள் ஏற்பட்டாலும் இரண்டாம் கட்டத்திற்கான திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் வலுவாக உள்ளது.

இந்தநிலையில் கடன் மறுசீரமைப்பின் அடுத்த படிகளாக வெளிப்புற வணிகக் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை முடிப்பது மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் கொள்கை அடிப்படையில் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது என்பவையே எஞ்சியுள்ளன என்று கோசாக் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்நாட்டுக் கடன் செயற்பாடுகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ளன என்பதோடு கூடுதலாக சீன மேம்பாட்டு வங்கியுடனான பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட நிலையில் உள்ளன என்றும் ஜூலி கோசாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை

ஒரே நாளில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த உற்ற நண்பர்கள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version