Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் ஒத்துழைப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கை

இலங்கையின் ஒத்துழைப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முயற்சிகளின் வெற்றிக்கு, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ கடனாளிகளின் தொடர்ச்சியான ஆதரவும், கடன் பரிமாற்றத்தில் பத்திரப்பதிவுதாரர்களின் பங்கேற்பும் அவசியமானது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ( Kristalina Georgieva) இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், வெளிநாட்டுப் பத்திரதாரர்களின் தற்காலிக வழிநடத்தல் குழு மற்றும் இலங்கையின் உள்ளூர் கூட்டமைப்பு ஆகிய இரண்டு நிறுவனங்களுடனும் இலங்கை அதிகாரிகள் செய்துள்ள உடன்படிக்கைகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சி

இந்த உடன்படிக்கைகளின் விதிமுறைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேகத்தைப் பயன்படுத்திக் கொள்ள, கடன் வழங்குபவர் அதிக பங்கேற்புடன் கடன் செயல்பாட்டை விரைவாக முடிப்பது திட்டத்தின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கும் என்று ஜோர்ஜீவா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு இணையாக, எஞ்சியிருக்கும் ஏனைய கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து இறுதி செய்து வருகின்றனர்.

இந்த கூட்டு முயற்சியானது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் வெற்றிக்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முயற்சிகள் மூலம், இலங்கையின் அதிகாரிகள் தமது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை, நிலையான மற்றும் உயர் வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் ஜோர்ஜீவா கூறியுளளார்.  

NO COMMENTS

Exit mobile version