Home இலங்கை இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய குழுவின் அறிக்கை

இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய குழுவின் அறிக்கை

0

இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம்,
நாட்டின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பான பொருளாதார விளைவுகள்
ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8%
வளர்ச்சியடைந்தது, பணவீக்கம் தணிந்தது, உத்தியோகபூர்வ இருப்புக்கள் 6
பில்லியன் டொலர்களை எட்டியுள்ளன.

 சர்வதேச நாணய நிதியம் 

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் தற்போதைய நிதி முன்னேற்றங்களைப்
பாராட்டியது.

எனினும், அதிகரித்து வரும் வெளிப்புற அபாயங்கள் குறித்து
எச்சரித்தது.

நிலையான மறுசீரமைப்பு முயற்சிகளை, குறிப்பாக வருவாய் உருவாக்கம், கடன்
மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் கீழ் முக்கிய உறுதிமொழிகளை
நிறைவேற்றுவதில் முன்னேற்றம் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது
மதிப்பாய்வின் பின்னணியில் முறையாக மதிப்பிடப்படும்.

ஐந்தாவது மதிப்பாய்வின் போது அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும் என சர்வதேச
நாணய நிதியத்தின் பணிக்குழாமின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/imf-team-ends-visit-to-sri-lanka-1753461125

NO COMMENTS

Exit mobile version