Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி சபை தேர்தலின் முக்கியத்துவம் என்ன…!

உள்ளூராட்சி சபை தேர்தலின் முக்கியத்துவம் என்ன…!

0

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு சட்டம் சார்ந்த தெளிவு இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழுக்கு அவர் அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வாக்காளர்களுக்கும் மாநரசபையினுடைய அதிகாரம் என்ன, நகர சபைகளினுடைய அதிகாரம் என்ன, பிரதேச சபைகளினுடைய அதிகாரங்கள் என்ன என்பது தொடர்பான தெளிவு இருக்க வேண்டும்.

அத்தோடு, அந்த அடிப்படை அதிகாரங்களைப் பயன்படுத்தி தங்களுக்கான சேவையை பொது நலத்தோடு வழங்கக் கூடிய நபர்கள் யார் என்பதை தெரிவு செய்வதற்கான மன நிலையை மக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அப்போது தான் தேர்தலிலே வாக்களிப்பு என்பது சரியான விதத்திலே இடம்பெறும்.அத்தோடு, சரியான பிரதிநிதிகள் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான விடயங்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்………..

NO COMMENTS

Exit mobile version