Home இலங்கை கல்வி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதன அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று நாட்களுக்கு தொழிற்சங்க போராட்டம்

இதன்படி நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/important-announcement-education-department-1719147544

NO COMMENTS

Exit mobile version