Home இலங்கை சமூகம் தேர்தல் ஆணையாளரின் விசேட அறிவிப்பு: வெளியாகவுள்ள வர்த்தமானி

தேர்தல் ஆணையாளரின் விசேட அறிவிப்பு: வெளியாகவுள்ள வர்த்தமானி

0

வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, வாக்களார் ஒருவருக்கு 109 ரூபாவை தேர்தல் பிரசாரத்தின் போது வாக்களார்கள் செலவிட முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

வர்த்தமானி அறிவித்தல்

இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வௌியிடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, ஒரு வாக்காளருக்குச் செலவிட அனுமதிக்கப்பட்ட தொகை, வேட்புமனுக்கள் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version