Home இலங்கை சமூகம் அஸ்வெசும கொடுப்பனவு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அஸ்வெசும கொடுப்பனவு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0

அஸ்வெசும பயனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் (27.02.2025) வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டுறவு பிரதி அமைச்சரும் வன்னி அபிவிருத்தி குழு தலைவருமான உபாலி சமரசிங்க (Upali Samarasinghe) தலைமையில் வுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

சுய தொழில் முயற்சியாளர்கள்

இதன்போது, அரச நிவாரணங்களை நீண்ட காலத்திற்கு வழங்க முடியாது என்பதோடு கொடுப்பனவை பெறுகின்ற பயனாளர்களை சுய தொழில் முயற்சியாளர்களாக மாற்றியமைப்பது தொடர்பான வேலை திட்டத்தை தெளிவுபடுத்தும் விதமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஷ்குமார் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக செயலாளர், வவுனியா மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் உட்பட பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் உட்பட அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

You may like this


https://www.youtube.com/embed/FHoifofTjIc

NO COMMENTS

Exit mobile version