Home இலங்கை சமூகம் வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

0

நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள (motor traffic department) பிரதான அலுவலகத்தினை எதிர்வரும் 20 ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் வாக்களிப்பு நிலையம்

இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாகக் குறித்த அலுவலகம் செயற்படவுள்ள காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் இரண்டு பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவை 23ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 

Source: https://ibctamil.com/article/important-announcement-from-dept-of-motor-traffic-1726106851

NO COMMENTS

Exit mobile version