Home இலங்கை சமூகம் இரவில் இருமல் வந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

இரவில் இருமல் வந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

0

தற்போது நிலவும் குளிர் காலநிலையுடன் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிபுணர், கடந்த சில நாட்களாக ‘இன்புளுவன்சா’ நோயாளர்களின் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இருந்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள்

மேலும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களிடம் மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த அறிகுறிகள் இருந்தால் முகமூடி அணிவது பொருத்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கு இரவில் இருமல் வந்தால், நிமோனியா ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version