Home இலங்கை சமூகம் மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்

மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்

0

மன்னார் (Mannar) சதொச மனித புதைகுழி தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.

மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு இன்றைய தினம் (5) மன்னார்
நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு இன்றைய தினம் (5) மன்னார்
நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சதொச மனித புதைகுழி

இதன் போது ஏற்கனவே அழைக்கப்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருந்த நிலையில்,
மன்னார் நீதிமன்ற நீதவான் மற்றும் அழைக்கப்பட்ட நிறுவனத்தினரும் குறித்த சதொச
மனித புதைகுழி பகுதியை இன்றைய தினம் காலை நேரடியாகச் சென்று
பார்வையிட்ட போது சில தீர்மானங்களுக்கு முன் வந்தார்கள்.

குறித்த புதைகுழி பிரதேசத்தை சுத்தப்படுத்துவதாகவும், நிரம்பியுள்ள நீரை
அகற்றுவதற்கு நகர சபை இனங்கிக்கொண்டுள்ளதன் அடிப்படையில், குறித்த நீரை
அகற்றுவது என்றும் குறித்த புதைகுழியை பகுதி அளவில் மூடுவது தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டது.

இதன் போது ஏற்கனவே எடுக்கப்பட்ட மண் சதொச நிறுவனத்திடம் காணப்படுகின்றதா, அது
எங்கே இருக்கிறது போன்ற விடயங்களை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு
சமர்ப்பிக்குமாறும், தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், இந்த வழங்கு மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி மேலதிக நடவடிக்கைக்காக அழைக்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version