Home இலங்கை அரசியல் மோடி-ரணில் இடையே முக்கிய சந்திப்பு

மோடி-ரணில் இடையே முக்கிய சந்திப்பு

0

இந்தியாவுக்கு(INDIA) விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் NXT கருத்தரங்கின் ​போது இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

முக்கிய சந்திப்பு

இது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைத்தளப் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில்”எனது நண்பர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தேன்.

எங்களுக்கி​டையிலான தொடர்பாடல்களை எப்போதும் நான் விரும்புகின்றேன். பல்வேறு விடயங்கள் தொடர்பிலான அவரது கண்ணோட்டங்களை நான் மதிக்கின்றேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version