Home சினிமா ஹிந்தி திணிப்பு குறித்து சிறகடிக்க ஆசை சீரியலில் வந்த சூப்பரான கருத்து… முழு விவரம்

ஹிந்தி திணிப்பு குறித்து சிறகடிக்க ஆசை சீரியலில் வந்த சூப்பரான கருத்து… முழு விவரம்

0

சிறகடிக்க ஆசை

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி தொடர்களுக்கு பிறகு ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு தொடர் என்றால் அது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் தான்.

முத்து-மீனா கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடர் விறுவிறுப்பின் உச்சமாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது கதைக்களத்தில் ரோஹினி மாமாவை அண்ணாமலை குடும்பத்தார் சந்திப்பார்களா என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது.

ஹிந்தி திணிப்பு

இந்த நிலையில் தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக பேசப்படும் ஹிந்தி திணிப்பு குறித்து சிறகடிக்க ஆசை சீரியலில் எதார்த்தமாக பேசப்பட்டுள்ளது.

முத்து தனது நண்பர்களிடம், அவசியம் என்றால் தேவைப்பட்டால் நாம் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் நீ கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று தான் திணிக்க கூடாது.

நாம் பசித்தால் சாப்பிடலாம், ஆனால் பசிக்கவில்லை என்றாலும் சாப்பிட வேண்டும் என்பது தான் தவறு என பேசியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version