Home இலங்கை அரசியல் இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இன்று (01.10.204) முதல் ஒக்டோபர் 08ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பெயர்பட்டியல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொது தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும்.

வாக்காளர் பட்டியல்

இதன்படி, தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல்கள் இன்று முதல் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள், அனைத்து பிரதேச செயலக அலுவலகங்கள், அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில் வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும் இடங்களிலிருந்தும், மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலிருந்தும் இலவசமாகக் கிடைக்கும் மற்றும் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை ஒக்டோபர் 8ஆம் திகதி அல்லது அதற்கு முன் சம்பந்தப்பட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version