Home அமெரிக்கா அமெரிக்கா செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

அமெரிக்கா செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

0

அமெரிக்காவிற்கு செல்லவிருக்கும் சர்வதேச பயணிகள், தங்களின் டிஜிட்டல் சாதனங்களில் உள்ள தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் முக்கியமான தரவுகளை நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சரிபார்ப்புக் கொள்கைகளின் கீழ் மின்னணு சோதனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, பயணிகளின் மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உரிய அனுமதியின்றியே ஆய்வு செய்யப்படும்.

நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்பு

இதற்கான அனுமதி சுங்க மற்றும் எல்லை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பயணிகளிடம் அரசியல் கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட படங்கள் இருந்தால் அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

இதனால் தனியுரிமையைப் பாதுகாக்கவும் சேமிக்கப்பட்ட தரவைக் குறைக்கவும், கிளவுட் சேவைகளைப் பயன்படுத்த பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version