Home இலங்கை சமூகம் வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக புதிய வாகனப்பதிவுகள் மற்றும் வாகனப் பெயர்ப்பதிவுகளின் போது இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, புதிய வாகனப் பதிவின் போது வாகன உரிமையாளர்களுக்கு வாகன இலக்கத்தகடு வழங்காமை குறித்து கடிதமொன்று வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு

எனவே மறு அறிவித்தல் வரை வாகன உரிமையாளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்த வேண்டாம் என பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த வருடம் (2025) பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

 

Source: https://tamilwin.com/article/important-notice-to-vehicle-owners-1730594256

NO COMMENTS

Exit mobile version