ஓய்வூதியத் திணைக்களம் எதிர்வரும் ஆண்டு (2026) ஓய்வூதியம் வழங்குவதற்கான மாதாந்திர திகதிகளை அறிவித்துள்ளது.
ஓய்வூதிய திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சமிந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
திகதிகள் வெளியீடு
இதற்கமைய, ஓய்வூதிய சுற்றறிக்கை எண் 03/2025 மற்றும் Pen/Pol06/25-2024 மூலம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது கருவூலத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 09, பெப்ரவரி 10, மார்ச் 10, ஏப்ரல் 09, மே 08, ஜூன் 10, ஜூலை 10, ஆகஸ்ட் 10, செப்டம்பர் 10, அக்டோபர் 07, நவம்பர் 10 மற்றும் டிசம்பர் 10 ஆகிய திகதிகளில் ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
