அரியாலை காரைமுனங்கு பகுதியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நேரில் சென்று
பார்வையிட்டார்.
குறித்த பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண
ஆளுநருக்கு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, ஆளுநர் இவ்வாறு குறித்த பகுதியை பார்வையிட்டார்.
தரம்பிரிக்கும் நடவடிக்கை
இதன்போது, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் தரம்பிரிப்பு நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் தொடர்பிலும் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ஆளுநருக்கு தெளிவுபடுத்தினார்.
தரம்பிரிக்கும் நடவடிக்கையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 17 பேர் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார்.
இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது ஆளுநரின் செயலாளர், அந்தப் பகுதி கிராம அலுவலர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
