Courtesy: H A Roshan
தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதான காரியாலயமானது தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திராவின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று(19.08.2024) காலை இடம்பெற்றுள்ளது.
பிரசாரப் பணிகள்
நாட்டின் மறுமலர்ச்சிக்காக ஐக்கியமாக நாடே ஒன்று திரண்டு இருக்கின்றது. அந்த வகையில் கிண்ணியாவிலும் தேர்தல் காரியாலயங்கள் அமைக்கப்பட்டு பிரசாரப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா நிறைவேற்று குழு உறுப்பினர்களும், 31 கிராம சேவக பிரிவிற்கான தேர்தல் குழு பொறுப்பாளர்களும் குழு உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.