Home இலங்கை சமூகம் இலங்கையில் அதிகரிக்கும் வெறிநாய்க்கடி நோய் தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அதிகரிக்கும் வெறிநாய்க்கடி நோய் தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வெறிநாய்க்கடி நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவின்மை காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அந்த பிரிவின் விசேட வைத்தியர் அத்துல லியனபத்திரண (Atula Liyanaphathirana) குறிப்பிட்டுள்ளார்.

வெறிநாய்க்கடி நோய்

அத்தோடு, நாய் கடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு சமூகமளித்து சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version